உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பருத்தி வாரச்சந்தை நாளை துவக்கம்

பருத்தி வாரச்சந்தை நாளை துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி வாரச்சந்தை நாளை (6ம் தேதி) துவங்க உள்ளது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடப்பாண்டிற்கான பருத்தி மறைமுக ஏல விற்பனை நாளை (6ம் தேதி) தொடங்கி, வாரந்தோறும் புதன்கிழமை தினங்களில் நடைபெற உள்ளது. விவசாயிகள் பருத்தி பயிரை காய வைக்க தானியக்களமும், 1,800 மெட்ரிக் டன் கொண்ட மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் குடோன் வசதியும் உள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாரச்சந்தையில் பங்கேற்று, பருத்தியின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்வர். போதிய விலை இல்லை என கருதும் விவசாயிகள், தங்களது மூட்டைகளை குடோனில் பத்திரமாக வைத்து, அடுத்த வாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை செய்யலாம். அதேபோல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மக்காச்சோளம் மறைமுக ஏல விற்பனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி