உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் கடந்த 6 மாதத்தில் ரூ.19.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான அரங்கநாத பெருமாள் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புன்னிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் பல்வேறு மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கோமாதா உண்டியல், 2 திருப்பணி உண்டியல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் 6 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. சங்கராபுரம் சரக ஆய்வாளர் கவிதா, செயல் அலுவலர் பாக்கியராஜ் கண்காணிப்பில், பிரகாஷ் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், நிரந்தர உண்டியல்களில் ரூ.15,83,268 பணமும், 56 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தன . கோமாதா உண்டியலில் ரூ.72,455 பணமும், திருப்பணி உண்டியல்களில் ரூ.2,89,885 காணிக்கை பணமும் இருந்தது. மொத்தமாக 19 லட்சத்து 45 ஆயிரத்து 608 ரூபாயினை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை