காணிக்கை எண்ணும் பணி
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கடந்த 6 மாதத்தில் ரூ.1.14 லட்சம் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக கோவில் வளாகத்தில் 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு அக்., மாதம் உண்டியல்திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. அறநிலையத்துறை செயல் அலுவலர் பாக்யராஜ் தலைமையில் எழுத்தர் விமல்ராஜ், அர்ச்சகர் நாகராஜ் மற்றும் பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எடுக்கப்பட்டது. இதில், 1 லட்சத்து 14 ஆயிரத்து 803 ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. தொடர்ந்து, கோவில் வங்கி கணக்கில் காணிக்கை பணம் செலுத்தப்பட்டது. ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.