உள்ளூர் செய்திகள்

 கிரிக்கெட் போட்டி

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த யால் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆறுபடை அணி சார்பில் 2ம் ஆண்டு பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன. முடிவில் மைக்கேல்புரம் அணி முதலிடம் பிடித்தது. முதலிடத்தை பிடித்த அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. அதேபோல், 2வது இடம் பிடித்த எகால் அணிக்கு 8,000 ரூபாய், மூன்றாமிடம் பிடித்த பிரம்மகுண்டம் அணிக்கு 5,000 ரூபாய் 4ம் இடம் பிடித்த எகால் அணிக்கு 3,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ