மேலும் செய்திகள்
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
27-Jun-2025
திருக்கோவிலூர்:முருகன் பெயரில் அரசியல் கட்சி மாநாடு நடத்துவதாக பொன்முடி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார். திருக்கோவிலுார், கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சொறையப்பட்டு ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் ஸ்ரீராம், திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பொன்முடி எம்.எல்.ஏ., பேசுகையில், 'பெரியாரையும், அண்ணாவையும் தாக்கி பா.ஜ.,வினர் நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதில் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் உட்கார்ந்துள்ளனர். முருகனை கும்பிடுவதில் தப்பில்லை. ஆனால் முருகன் மாநாடு என்று பெயர் வைத்துக் கொண்டு, அரசியல் கட்சி மாநாடாக நடத்துகின்றனர். அங்கு செய்தது தவறு என்பதை நாம் உணர்த்தி இருக்கிறோம்' என்றார்.
27-Jun-2025