உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பயிர் கடனளவு நிர்ணயித்தல் தொழில்நுட்ப குழு கூட்டம்

பயிர் கடனளவு நிர்ணயித்தல் தொழில்நுட்ப குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் 2025-26ம்ஆண்டுக்கான பயிர் கடனளவு நிர்ணயம் செய்வதற்கான மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் 2025-26ம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ள பயிர் கடன், விரிவாக்கப்பட்ட கே.சி.சி., கடன் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புகளுக்கான நடைமுறை செலவினங்கள் மீதான கடன்கள் வழங்கும் அளவு, கடன் வழங்கும் காலம், திருப்பி செலுத்துவதற்கான காலம் நிர்ணயித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனை பெற்று, அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி, பயிர்க்கடன் அளவுகளை மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை