உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சைபர் குற்றம் தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு

சைபர் குற்றம் தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சைபர் குற்றம் தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி ஆளுநர் மதிவாணன், துணை முதல்வர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி டீன் அசோக் வரவேற்றார். சைபர் செக்யூரிட்டி நிறுவன நிர்வாக அலுவலர் ரெக்ஸ் ஆன்டினி புஷ்பராஜ் மற்றும் புராஜெக்ட் லீடு ஸ்டாட்அப் செந்தமிழ்அரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் பேசுகையில், 'இன்றைய காலத்தில் இணையம் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி மாறிவிட்டது. ஆனாலும் இணையத்தின் பயன்பாட்டுடன் சேர்ந்து பல்வேறு அபாயங்களும் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்' என்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுாரி உதவி பேராசிரியர்கள் கார்த்திகா, பாரதி, சந்திரபிரியா, அன்பரசன், கார்த்திக், கயல்விழி, ஹேமவர்தினி, விமலா ஜென்சி ஆகியோர் செய்திருந்தனர். கல்லுாரி கனிணி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை