குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே, குடிநீர் 'மினி' டேங்க்கை சேதப்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மினி டேங்க்கை, அதே பகுதியை சேர்ந்த ராஜாராமன் மகன் திருமூர்த்தி, 29; குடிபோதையில், இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தினார். இந்த காட்சி, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து ஊராட்சி தலைவர் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.