உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆபத்தான மின்கம்பம் மாற்றம்

 ஆபத்தான மின்கம்பம் மாற்றம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த மின் கம்பம் தினமலர் செய்தி எதிரொலியால் மாற்றப்பட்டது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரமாக இருந்த மின்கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்தது. மின்கம்பத்தின் நடுப்பகுதி உடைந்து, சாய்ந்த நிலையில் இருந்ததால் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் அபாய நிலை ஏற்பட்டது. விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய துறையினர் மாற்றி புதிய மின் கம்பம் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !