உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ெஹல்மெட் வாகன ஓட்டிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

ெஹல்மெட் வாகன ஓட்டிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி: ெஹல்மெட் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 20 பேருக்கு போக்குவரத்து போலீசார் மளிகை பொருட்கள் வழங்கினர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ெஹல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடையே பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி நகர பகுதியில் இரு சக்கர வாகனங்களில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், ெஹல்மெட் அணிந்து செல்வதில் உள்ள நன்மைகள் குறித்து இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் நேற்று மாலை கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ெஹல்மெட் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 20 பேருக்கு 500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ