உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

வானுார்: வானுார் ஒன்றிய அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கிளியனுாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது. வானுார் (தனி) தொகுதியில், வானுார் மற்றும் கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. வானுார் ஒன்றியத்தில், 65 ஊராட்சிகளில், 227 கிராமங்கள் உள்ளன. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வானுார் ஒன்றிய அலுவலகத்திற்கு, வானுாரை சுற்றியுள்ள, 34 ஊராட்சிகளில் இருந்து மக்கள் வந்து செல்லும் வகையில், 15 முதல் 20 கி.மீ., துாரத்திற்குள் அனைத்து கிராமங்களும் அமைந்துள்ளன. மீதமுள்ள, 31 ஊராட்சிகள் கிளியனுாரை சுற்றி அமைந்துள்ளன. இக்கிராம மக்கள், வானுார் ஒன்றிய அலுவலகத்திற்கு 30 முதல் 35 கி.மீ., துாரம் கடந்து வரவேண்டியுள்ளது. இது, கிராம மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. குறிப்பாக மரக்காணம் ஒன்றியத்தை ஒட்டியுள்ள கிளாப்பாக்கம், நாணக்கல்மேடு, காயல்மேடு, சித்தலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வெகு துாரத்தில் அமைந்துள்ளன. 45 ஊராட்சிகளை கொண்ட கண்டமங்கலம் பகுதியில் தனியாக பி.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. அதே போன்று வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, கிளியனுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை