உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுரவ தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், மகளிரணி தலைவர் ஜெகதீஸ்வரி, பொருளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தன்ராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், பண்டக சாலையில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்களை விநியோகத்தில் பொட்டலம் முறையை பின்பற்ற வேண்டும் என்பது உட்பட 35 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை