விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் பலர், 125 ஏக்கர் பரப்பளவில் மா மரம் பயிரிட்டுள்ளனர். மாங்காய் உற்பத்தியை அதிகரிக்க கிளைகள் கவாத்து செய்யப்படுகிறது. இதில், மாங்காய் அறுவடை செய்த பிறகு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மரத்தில் தாழ்வான நிலையில் உள்ள கிளைகள், ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் காய்ந்த கிளைகளை நீக்க வேண்டும். மரத்தில் வெட்டுப்பட்ட மற்றும் காயம் ஏற்பட்ட இடங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பூஞ்சான் கொல்லி கரைசலை மேற்பூச்சாக பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் மரத்தின் உள்ள அனைத்து கிளைகளுக்கும் சூரிய வெளிச்சம், காற்று கிடைத்து நன்றாக வளரும். மகசூல் அதிகரிக்கும் என கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் ஜெயமணி, உதவி அலுவலர்கள் பாக்கியராஜ், சவுந்தர்ராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.