உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு

துணை முதல்வர் உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிந்த துணை முதல்வருக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி நேற்று கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி மாடூர் டோல்கேட்டில் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமையில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி உள்ளிட்ட நிர்வாகிகள் உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் பணமாலை வழங்கி வரவேற்பு அளித்தனர். மாவட்ட அவைத் தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., துணைச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அன்பு மணிமாறன், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், திலகவதி நாகராஜன், சந்திரன்.நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, இளைஞரணி அமைப்பாளர் அருள், ஒன்றிய துணைச் சேர்மன்கள் அஞ்சலை கோவிந்தராஜ், பாட்சாபீ ஜாகீர்உசேன், தொழிலதிபர் கதிரவன், ஊராட்சி தலைவர்கள் ஆண்டி, சின்னக்கண்ணு, செல்வம், துணைத் தலைவர்கள் சிந்தாமணி ராஜேந்திரன், பழனி, சாமிக்கண்ணு, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நகரம் சார்பில் வரவேற்பு

கள்ளக்குறிச்சிக்கு நான்கு முனை சந்திப்பில் தி.மு.க., நகர செயலாளர் நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி கமிஷனர் சரவணன், கவுன்சிலர்கள் ரமேஷ், அஸ்வின்குமார், யுவராணி ராஜா, சீனிவாசன், மீனாட்சி கேசவன், விமலா விஜய்மனோஜ், பாத்திமாபீ அபுபக்கர், செல்வம், விஜயகுமாரி கலைச்செல்வன், தேவராஜ், ஞானவேல், உமா வெங்கடேசன், சுமதி செல்வராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி