தினமலர் சேவை மகத்தானது: ஷ்ரவன்குமார் பாராட்டு
கள்ளக்குறிச்சி: மாணவர்கள் அச்சமின்றி நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ள, தினமலரின் கல்வி சேவை மகத்தானது என, ஏ.கே.டி., நீட் பயிற்சி மைய இயக்குனர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி 'தினமலர்' நாளிதழ் கல்விக்கு உற்ற துணையாக, உறுதுணையாக சேவை புரிந்து வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் மூலம் பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறது.பின் தங்கிய பகுதியான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தினமலர் நீட் மாதிரி தேர்வினை நடத்தி உள்ளது. வரும் மே, 4ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக மாணவ, மாணவியர் தயாராகி வரும் சூழலில், தேசிய தேர்வு மையம் வகுத்துள்ள கட்டுபாடுகளுடன் மாதிரி தேர்வை நடத்தியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி நீட் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.தினமலரின் கல்வி சேவை மகத்தானது. இந்த பணிகள் மென்மேலும் சிறப்புற வேண்டும். இந்த மாதிரி தேர்வுக்கான கேள்வி தாள்களை எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்த, ஆசிரியர் குழுவினர் சிறந்த முறையில் தயாரித்தனர்.மேலும், நீட் மற்றும் ஐ.ஐ.டி., தேர்வில் எங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் மாவட்டத்தில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர்.எங்களது பயிற்சி மையத்தில் படித்த மாணவ, மாணவியர் 636 பேர் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படித்து வருகின்றனர். மருத்துவ சேர்க்கையில் மட்டுமின்றி, ஜே.இ.இ., தேர்விலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.