மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
26-Jun-2026
ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு
18-Jun-2026
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புனித அன்னாள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் நடந்த ஊர்வலத்திற்கு, புனித அன்னாள் மனநல காப்பகத்தின் நிர்வாகி ஜான்சி மெட்டில்டா தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் ஜான்ரத்தினம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சப் இன்ஸ்பெக்டர் ராமர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், 'போதையை தவிர்ப்போம், பாதுகாப்பாக வாழ்வோம்', 'போதை அழிவின் பாதை', 'போதை இல்லா இளைஞர், வளமான இந்தியா' உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அரசு மகப்பேறு மருத்துவமனை வழியாக மந்தைவெளி வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில், காப்பக ஆசிரியர்கள் மஞ்சு பிரியா, பிரிட்ஜித், சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Jun-2026
18-Jun-2026