மேலும் செய்திகள்
மின் ஒயர் திருடியவர் கைது
19-Jul-2025
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து, மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் கோபிநாத்ஜி தலைமையிலான குழுவினர், கச்சிராயபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளித்தனர். பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, காயமடைந்தவர்களை மீட்பு, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா, வருவாய் ஆய்வாளர் சுமதி, வி.ஏ.ஓ., செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Jul-2025