மேலும் செய்திகள்
34 தலைமை ஆசிரியர் விருப்ப இடமாறுதல்
02-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு துறை மூலம் பேரிடம் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடந்தது. பேரிடர் மேலாண்மை தாசில்தார் அருள்மொழி தலைமை தாங்கினார். தாசில்தார் பசுபதி, பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ராதா, துணை தலைமை ஆசிரியர்கள் அருள்மணி, வேலு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் வரவேற்றார். தேசிய பேரிடர் மீட்பு துறை தலைமை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் இயற்கை பேரிடர் மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பாக இருத்தல், வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்பது, விஷவாயு தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவசர கால முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். வருவாய் ஆய்வாளர் வசந்தா, வி.ஏ.ஓ., தமிழ் இனியன், கிராம உதவியாளர் வீரமுத்து, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
02-Jul-2025