உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

திருக்கோவிலுார்: துணை முதல்வர் உதயநிதி 48 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லுாரில் 100 கபடி அணிகளை சேர்ந்த மூன்றாயிரம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கும் விழா நடக்கிறது. இது குறித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை; துணை முதல்வர் உதயநிதியின் 48 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லுாரில் இன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெறும் விழாவில் 125 வாலிபால் அணிகள் மற்றும் 100 கபடி அணிகளை சேர்ந்த மூன்றாயிரம் விளையாட்டு வீரர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி வழங்குகிறார். இதில் விளையாட்டு வீரர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை