உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனருமான, மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.அதில், வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள், வடதொரசலுாரில் பசுந்தாள் உர விதைகள் பயிர், நாகலாரில் கனவு இல்ல திட்டத்தின் வீட்டின் கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.தொடர்ந்து, நாகலுாரில் ரூ.56.47 கோடி மதிப்பில் பள்ளி கட்டடம், மாணவ, மாணவியர் விடுதி கட்டுமான பணிகள், கூத்தக்குடி ஊராட்சியில் ரூ.70.08 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டம் குறித்து ஆய்வு நடந்தது.இதனையடுத்து, மாவட்டத்தில் திட்ட மதிப்பீட்டின் படி தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்; தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டடம் கட்டுவதை கண்காணிக்க வேண்டும்; அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்; என அலுவலர்களுக்கு, நில அளவை மற்றும் நிலவரித்திட்டஇயக்குனர் உத்தரவிட்டார். ஆய்வில், டி.ஆர்.ஓ., ஜீவா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், இணை இயக்குனர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை