மேலும் செய்திகள்
சாலை விரிவாக்கத்துக்காக 190 கடைகள் இடிக்க முடிவு
13-Oct-2025
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் வனப்பகுதி வழியே செல்லும் சாலையை அகலப்படுத்த மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்தார். தியாகதுருகம் ஒன்றிய காப்புக்காடுகளின் வழியே செல்லும் அகலம் குறைவான சாலைகள் வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் அகலப்படுத்த முடியவில்லை. மிகக் குறுகியதாக சாலையால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமம் நீடித்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி வனப்பகுதி சாலையை ஆய்வு செய்தார். பொரசக்குறிச்சி - ஈய்யனுர் சாலை, செம்பியமாதேவி - நின்னையூர் சாலை, கூத்தக்குடி - நின்னையூர் சாலை, அசகளத்துார்- அடரி செல்லும் சாலையில் வனப்பகுதி இடங்களை ஆய்வு மேற்கொண்டார். தற்போது உள்ள சாலையின் இருபுறமும் தலா 3 மீட்டர் அகலப்படுத்த அளவீடுகள் செய்யப்பட்டது. பி.டி.ஓ., கொளஞ்சிவேல், வனச்சரக அலுவலர் கோகுல், வனவர் மணி, வனக்காப்பாளர் குமரவேல், ஒன்றிய பொறியாளர் வசந்தி, பணி மேற்பார்வையாளர் கண்ணன் உடன் இருந்தனர்.
13-Oct-2025