உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., அரசை கண்டித்து  அ.தி.மு.க., மனித சங்கிலி

தி.மு.க., அரசை கண்டித்து  அ.தி.மு.க., மனித சங்கிலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் மின்சார கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் உயர்வை கண்டிப்பது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கபாண்டியன், வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், பொருளாளர் வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, பாசறை செயலாளர் வினோத், மருத்துவரணி துணை செயலாளர் பொன்னரசு, நகராட்சி கவுன்சிலர்கள் முருகன், சத்தியா குட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !