தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருக்கோவிலுாரில் இன்று பிரசாரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இன்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்கும் 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' கூட்டத்தில் திரளாக பங்கேற்க கட்சியினருக்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கை: 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 22ம் தேதி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா திருக்கோவிலுார் தொகுதியில், பொதுமக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக திருக்கோவிலுார் வருகை தரும் அவருக்கு மாலை 4:30 மணிக்கு அரசூர் கூட்ரோட்டில் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 5:30 மணிக்கு திருவெண்ணைநல்லுார் ப ஸ் நிலையத்தில் பேசுகிறார். மாலை 6:00 மணிக்கு திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருந்து, வடக்கு வீதி வழியாக பொதுமக்களை சந்தித்தபடி சாலையில் நடந்து சென்று, ஐந்து முனை சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து 7:00 மணிக்கு கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் பேசுகிறார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சி றப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.