பி.டி.ஓ., அலுவலகம் கட்ட நிதி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் புதிய பி.டி.ஓ., அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கள்ளக்குறிச்சியில் கடந்த 26ம் தேதி நடந்த கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில், ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி, ரிஷிவந்தியத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வுக்கு நன்றி தெரிவித்து கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது, தி.மு.க., நிர்வாகி சாமிசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவமுருகன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன் உட்பட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.