தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
ரிஷிவந்தியம்; ; பகண்டை கூட்ரோட்டில் தி.மு.க., வினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.