தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் : சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் தி.மு.க சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. உதய சூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில்,100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய, ரூ.4,034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை, ஒன்றிய குழு தலைவர் திலகவதி, கமருதீன், சாகுல், வக்கீல் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.