மேலும் செய்திகள்
தி.மு.க., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
19-Apr-2025
தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
11-May-2025
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நுார்முகமது வரவேற்றார். கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், மகளிர் அணி துணை அமைப்பாளர் மகாதேவி முன்னிலை வகித்தனர். தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து, தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர்தல் பணி குழு செயலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் பாலு, சண்முகம், நெடுஞ்செழியன், அப்துல் கபூர், ராதாகிருஷ்ணன், அக்பர் உசேன், சிவக்குமார், பாலாஜி, அருட்செல்வன், சிலம்பரசன், கோவி முருகன், பாப்பா, ஏழுமலை உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். இளைஞரணி அமைப்பாளர் அப்போலியன் நன்றி கூறினார்.
19-Apr-2025
11-May-2025