தி.மு.க., பொதுக்கூட்டம்
சங்கராபுரம், : சங்கராபுரம், சமத்துவபுரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி, மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார். தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி, சுதா, தொழிலதிபர் கதிரவன், கமருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.