உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனவு இல்லம் திட்டம்; கலெக்டர் எச்சரிக்கை

கனவு இல்லம் திட்டம்; கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் பணம் கேட்டு ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 4,200 வீடுகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவைகள் ஊராட்சி ஒன்றியங்களின் வாரியாக தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ. 3.50 லட்சம் நிதி தமிழக அரசால் உரிய பயனாளிகளுக்கு நேரிடையாக பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதுமில்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி தனி நபர்கள் ஒரு சில பயனாளிகளிடம் பணம் கேட்டு ஏமாற்றுவதற்கு முயற்சிப்பதாக சில புகார்கள் பெறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.எனவே பொதுமக்கள் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது.மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளோ அல்லது பொது அமைப்புகளை சேர்ந்தவர்களோ இச்செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை