உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் கேன்களை 3 மாதத்திற்கு ஒருமுறை புதியதாக மாற்ற வேண்டும் : கலெக்டர் பிரசாந்த் உத்தரவு

குடிநீர் கேன்களை 3 மாதத்திற்கு ஒருமுறை புதியதாக மாற்ற வேண்டும் : கலெக்டர் பிரசாந்த் உத்தரவு

கள்ளக்குறிச்சி : பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதியதாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் கடைகளுக்கு உரிமம் வழங்குதல், உரிமங்களை புதுப்பித்தல், உரிமம் பெறாத கடைகளின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல், குடிநீர் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உணவு மாதிரி பரிசோதனை செய்தல், மறுசுழற்சி செய்த எண்ணெய்களை சேகரித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் கேன்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது நுாறு முறை குடிநீர் நிரப்பிய பிறகு குடிநீர் கேன்களை கட்டாயம் புதிதாக மாற்றுவதை கண்காணிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் துறை அலுவலர்கள், வியாபாரிகள் உணவக சங்க நிர்வாகிகள், நுகர்வேர் அமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ