உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாக்கு போட்டு டிரைவர் தற்கொலை

துாக்கு போட்டு டிரைவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: விருகாவூரில் மனைவி வீட்டில் இல்லாத வருத்தத்தில் கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வெற்றி, 31; லாரி டிரைவர். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நந்திதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெற்றி வேலைக்காக வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது, மனைவி நந்திதா கோபத்தில் கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். வேலை முடிந்து கடந்த 29ம் தேதி வீட்டிற்கு வந்த வெற்றி, மனைவி இல்லாததால் வருத்தமடைந்து அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த வெற்றியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை