மேலும் செய்திகள்
பாரத கலாசார பாரம்பரிய மேம்பாட்டு இளைஞர் முகாம்
05-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரி யில் இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தாளாளர் மனோகர் குமார் தலைமை தாங்கினார். டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி செயலாளர் அசோக்குமார், கல்வியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாணவி ஜான்சினி வரவேற்றார்.கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் அப்புதுரை 'ஆன்லைனில் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள், தேவையற்ற லிங்குகளை கையாள்வதை தவிர்ப்பது குறித்து பேசினார்.துணை முதல்வர் ராமு, பேராசிரியர்கள் லதா, தேவி, செல்வம், கலியன், பிரபாகரன், அர்ச்சனா, மலர்கொடி, தேவி, சரிதா, ஜனனி, சிவராமன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியை குருஏஞ்சல் தொகுத்து வழங்கினார். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
05-Feb-2025