உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வி சிறந்த குடிமகனை உருவாக்கும் கள்ளக்குறிச்சி: கலெக்டர் பஞ்ச்

கல்வி சிறந்த குடிமகனை உருவாக்கும் கள்ளக்குறிச்சி: கலெக்டர் பஞ்ச்

கள்ளக்குறிச்சி: கல்வி என்பது ஒரு நல்ல பணியாளர்களை உருவாக்குவதல்ல, சிறந்த குடிமகன்களை உருவாக்குவதற்காக என, கலெக்டர் பிரசாந்த் பேசினார். கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த வினாடி - வினா போட்டியில் அவர் பேசியதாவது; உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நாமும் வாழ்க்கையின் உச்சத்தை நோக்கி ஓட வேண்டும். அறிவியலில் தெளிவு வேண்டும். வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'ஏ.ஐ' பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதுடன், பல்வேறு பரிணாம வடிவங்களை பெறும் நிலையில் உள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் நமக்கு பதிலளிப்பது மனிதர்களா அல்லது கணினியா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, மாணவர்களும் தங்களை மாற்றி கொண்டு, அதைவிட ஒரு படி மேலே செல்லவேண்டும். 'ஐ போன்' நிறுவனம் தொடர்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்கான காப்புரிமைகளை பெற்று வருகிறது. இதனால், மற்ற தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் உலகில் சிறந்த இடத்தில் உள்ளது. அதேபோல், மாணவர்களாகிய நீங்களும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதன் காப்புரிமையை பெறும் தகுதியை வளர்த்துக்கொண்டால் உலகில் சிறந்து விளங்கலாம். தேர்வெழுதுவதற்காக மட்டும் படிக்காமல், நன்கு புரிந்து, உள்வாங்கி படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரம் உயர்த்தப்படுகிறது. பாட புத்தக அறிவுடன் பொது அறிவையும் வளர்த்து, வாழ்க்கை தரம் உயர அடித்தளத்தை அமைத்து கொள்ளவேண்டும். குறிக்கோளோடு அடியெடுத்து வைத்து முன்னேற வேண்டும். நீங்கள் கற்கும் கல்வி நல்ல பணியாளர்களை உருவாக்குவதற்காக அல்ல, சிறந்த குடிமகன்களை உருவாக்குவதற்காக தான். எனவே மாணவர்கள் வாழ்க்கை கல்வியையும் கற்று, சமூக நோக்கோடு தங்களது தரத்தை உயர்த்தி கொள்ளவேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி