உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தாயார் மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து ஆராதிக்கப்பட்டது.பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரம் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. பின், சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த ஸ்ரீனிவாச பெருமாள் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி