உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் பெயர், விலாசம் தெரியாத 65 வயது மதிக்கதக்க முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கடந்த மாதம் 27ம் தேதி வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, முதியவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த 17ம் தேதி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ