உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூரை வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

கூரை வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனமயில், 72. இவர் கணவர் இறந்த நிலையில், கூரை வீட்டில் தனியாக வசித்தார். கடந்த இரு நாட்களாக, பலத்த மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு கூரை வீடு இடிந்து விழுந்தது. இதில் வனமயில் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர். தொழிலாளி பலி ராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரவி, 46. இவர், கீழக்கரையில் ஆடறுத்தான் தெருவில் பழைய ஓட்டு கட்டடத்தை பிரிக்கும் பணியில், பணி யாளர்களுடன் நேற்று ஈடுபட்டிருந்தார் . மதியம், 2:00 மணிக்கு ஓட்டு வீட்டின் சட்டத்தை பிரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பக்கவாட்டு சுவர் ரவியின் மேல் சாய்ந்தது. அக்கம் பக்கத்தினர், ரவியை மீட்டு, கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை