உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மளிகை கடைக்காரரை  தாக்கிய மின்வாரிய ஊழியர் கைது

மளிகை கடைக்காரரை  தாக்கிய மின்வாரிய ஊழியர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பணம் கடன் தராததால் மளிகை கடைக்காரரை தாக்கிய மின் வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 50; அப்பகுதியில் மந்தைவெளி தெருவில் மளிகைக் கடை வைத்துள்ளார்.தேவபாண்டலம் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அன்புச்செல்வன், 27; சங்கராபும் மின் வாரியத்தில் கள உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 5 நாட்களுக்கு முன் அன்புச் செல்வன், விஜயகுமாரின் மளிகை கடைக்குச் சென்று 500 ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் சிறிது நேரம் தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்றார்.அந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் மாலை விஜயகுமார் கடைக்கு வீச்சரிவாளுடன் சென்ற அன்புச்செல்வன், கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விஜயகுமாரை தாக்கினார்.புகாரின் பேரில், அன்புச்செல்வன் மீது வழக்குப் பதிந்த சங்கராபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !