உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார்:ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருக்கோவிலுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம், மாவட்ட பொது குழு உறுப்பினர்கள் முருகன், சாந்தி முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட பொது குழு உறுப்பினர் பாக்கியநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ