உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏமப்பேர் விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஏமப்பேர் விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பிள்ளையார் கோவில் தோப்பு விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்றுநடந்தது.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பிள்ளையார் கோவில் தோப்பில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாகடந்த ஆக.30-ம் தேதிநடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் தினம் நடத்தப்பட்டது. நேற்று அதன்பூர்த்திவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு மங்கல இசையுடன், விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கடஸ்தாபனம், கணபதி ஹோமம், விநாயகர் மூல மந்திர ஜெப வாசித்து ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்துவிநாயகர் சுவாமிக்கு விசேஷ திரவியங்களால் மகாஅபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்நடத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினைஅறங்காவலர் குழு தலைவர் தினேஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை