உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி: பழங்குடியின இளைஞர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் இன்று 9ம் தேதி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு, திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சிறப்பு திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் சேலம் மாவட்டம், மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று 8 ம் தேதி நடக்கிறது. முகாமில் ஜெர்மன் மொழி திறன் பயிற்சி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, துணை சுகாதாரப் படிப்புகள், டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் ஆகிய சிறப்பு பயிற்சிக்களுக்கான ஆட்சேர்க்கை நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பழங்குடியின இளைஞர்கள் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை