| ADDED : நவ 22, 2025 04:54 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை மகளிர் மற்றும் திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, தொழில் திறன் சார் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 10 லட்சம் ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் கொண்டு தொழில் புரிய வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில் 25 சதவீதம் என அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் தொழில்கள் ஈடுபடலாம். இருப்பினும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கையர் பயன்பெறலாம். கல்வித் தகுதி மற்றும் குடும்ப வருமான வரம்பு கிடையாது. தகுதியும், ஆர்வமும் கொண்டவர்கள் போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விபரங்களுடன் www.msmeonline.tn.gov.inஎன்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். திட்டம் குறித்த தகவல்கள், விண்ணப்பம் பதிவு மற்றும் ஆலோசனைக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராஜா நகர் கள்ளக்குறிச்சி அலுவலகம் 04151-294057, 7760037120, 8248878219, 8825883896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.