உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சுற்றுச்சூழல் இயற்கை முகாம்

 சுற்றுச்சூழல் இயற்கை முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியை வழங்கிட இயற்கை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இம்முகாமில் கோமுகி அணை, கோமுகி அணை காட்சி முனை, நன்னிலம் சுற்றுச்சூழல் கிராம இயற்கை வீட்டு வசதி மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' வழங்கப்பட்டதுடன், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி