உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி

தென்னை மரத்திலிருந்து விழுந்த விவசாயி பலி

சின்னசேலம், ;நாகக்குப்பம் கிராமத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார். சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது நிலை தடுமாறி மரத்தின் மீது இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ