மேலும் செய்திகள்
செவிலியர் மாயம்
24-Jan-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் கிரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் நெடுமானுார், சோழம்பட்டு, பொய்குனம், அரசம்பட்டு, செட்டியந்துார் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சிறு கீரை, அரை கீரை, முளை கீரை, வெந்தயக்கீரை, பருப்பு கீரை, பொன்னாங்கண்ணி கிரை, முருங்கை கீரை, பாளக் கீரை, கொத்துமல்லி, பொதினா ஆகியவை சாகுபடி செய்துள்ளனர்.குடும்ப உறுப்பினர்களை கொண்டு கீரகைளை அறுவடை செய்து, ஒரு கட்டு 10 ருபாய் என விற்பனை செய்கின்றனர். சங்கராபுரம் உழவர் சந்தை, அத்தியூர், முரார்பாளையம், மூங்கில்துறைப்பட்டு, அரசம்பட்டில் நடக்கும் வாரச் சந்தையில் கீரைகளை விற்பனை செய்கின்றனர். குறைந்த செலவில் லாபம் கிடைப்பதால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
24-Jan-2025