உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு, பாலப்பட்டு, பாச்சேரி ஆகிய கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நன்கு செழித்து வளர்ந்துள்ளது.வருகிற தை மாதம் பானைக்கு மஞ்சள் கட்டி பொங்கல் வைப்பது வழக்கம். சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, பெங்களுரு ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் அறுவடை சமயத்தில் மஞ்சளை மொத்தமாக வாங்கி செல்வர்.இதனால் அலைச்சலின்றி விவசாயிகளுக்கு கைமேல் வருவாய் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ