உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி விவசாயிகள் மனு

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி விவசாயிகள் மனு

கள்ளக்குறிச்சி,; தாழவோடை ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; சின்னசேலம் அருகே மணிமுக்தா ஆற்றின் தடுப்பணையில் இருந்து சேஷசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பிரதான பாசன வாய்க்கால் உள்ளது. இதில் தாழவோடை ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் கிளை வாய்க்கால் உள்ளது. தாழவோடை ஏரி முழு கொள்ளளவை எட்டினால், சுற்று வட்டாரத்தில் உள்ள100 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும். இந்த கிளைவாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பதால் தாழவோடை ஏரிக்கு தண்ணீர் சரியாக செல்வதில்லை. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். எனவே, வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், அதன் கரையை 5 கி.மீ., துாரத்திற்கு பலப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ