உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நீர்பாசன வாய்க்கால் உடைப்பு சீரமைக்ககோரி விவசாயிகள் மனு

நீர்பாசன வாய்க்கால் உடைப்பு சீரமைக்ககோரி விவசாயிகள் மனு

கள்ளக்குறிச்சி: நீர்பாசன வாய்க்கால் உடைப்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அடுத்த செல்லம்பட்டு கிராம விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;கள்ளக்குறிச்சி அடுத்த செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள கோமுகி நீர் பாசன வாய்க்காலில் தொம்பை பாலம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் ஓடையில் நீர் சென்று வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பல முறை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அவ்வப்போது விவசாயிகளே சரி செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது உடைப்பு அதிகமாகனதால், விவசாயிகளால் சீரமைக்க முடியாமல் போனது. இதனால் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது.மேலும், சில இடங்களில் வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வாய்க்கால் உடைப்புகளை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ