உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள், பேரன் மாயம் தந்தை போலீசில் புகார்

மகள், பேரன் மாயம் தந்தை போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி: காணாமல் போன மகள், பேரனை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்தார்.கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பாதுஷா மனைவி யாஸ்மின்,27; திருமணமாகி 6 ஆண்டாகும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக யாஸ்மின் தனது குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக, விருகாவூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 15ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள வீட்டிற்கு செல்வதாக கூறிய யாஸ்மின் தனது மகன் ஷாகீத்தை அழைத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து யாஸ்மினின் தந்தை ஜலில் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன யாஸ்மின், ஷாகீத் ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ