உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சியில் அறிமுக விழா

கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சியில் அறிமுக விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது.விழாவிற்கு, தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தலைவர் லியோ நெல்சன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சென்னையில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பான முறையில் தங்க வசதியாக கட்டப்பட உள்ள விடுதிக்கான இடமும், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்காக பள்ளி, கல்லுாரி கட்டுவதற்கான இடமும் வரும் 23ம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளது.ஜெருசலேம் செல்ல 500 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதில், ஆண் ஒருவருக்கு 37 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். கன்னியாஸ்திரியாக செல்லும் பெண்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவு திட்டம் உலகம் முழுதும் பாராட்டை பெற்றுள்ளது. உலகளாவிய விளையாட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பார்.இவ்வாறு அமைச்சர் மஸ்தான் பேசினார்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ