பெண் மாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துணிக்கடையில் பணிபுரியும் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி தாலுகா, வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி கலை, 30; இவர் கடந்த 4 வருடங்களாக கள்ளக்குறிச்சியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற கலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி கலையை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் ராஜ்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.